1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா..? ரூ.66,000-த்தை நெருங்கும் தங்கம் விலை..!

Q

பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும், பாதுகாப்பான முதலீடாக அனைவரும் தங்கத்தை பார்ப்பதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று (மார்ச் 26) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,195-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (மார்ச் 27) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,235-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

23-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

22-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,840

Trending News

Latest News

You May Like