மீண்டும் மீண்டுமா..? ரூ.64,000-ஐ நெருங்கிறது தங்கம் விலை..!

மத்திய பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக பிப் 1 ஆம் தேதி காலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்த தங்கம் விலை மாலை ரூ. 360 அதிகரித்தது. அதன் பிறகு மீண்டும் சவரன் ரூ.64,000 ஐ கடந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு ஷாக்காக அமைந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான நேற்று (பிப்.17ஆம் தேதி) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,940க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (பிப்.18ஆம் தேதி) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63,760க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,970க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
12-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520