மீண்டும் மீண்டுமா..! இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!

தங்கம் விலை உயருவதும், மற குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை, சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.
ஆனால், அதற்கடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையை கடந்துள்ளது.
இந்நிலையில், இன்று (பிப்.22ஆம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.