மீண்டும் மீண்டுமா..! புதிய உச்சத்தில் தங்கம் விலை!

தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது. இதனால் தற்போது சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் வாங்க முடியாத அளவுக்குத் தங்கம் விலை ஒரு பவுன் 63,560 ரூபாய் அளவு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நேற்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் வியாழக்கிழமை விலையிலேயே இருந்தது. ஆனால் சனிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தையின் தாக்கம் காரணமாகத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (ஜனவரி 8) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 7,945 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 63,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது, தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!
08/பிப்ரவரி/2025 - ரூ. 63,560
07/பிப்ரவரி/2025 - ரூ. 63,440
06/பிப்ரவரி/2025 - ரூ. 63,440
05/பிப்ரவரி/2025 - ரூ. 63,240
04/பிப்ரவரி/2025 - ரூ. 62,480
03/பிப்ரவரி/2025 - ரூ. 61,640
02/பிப்ரவரி/2025 - ரூ. 62,320
01/பிப்ரவரி/2025 - ரூ. 62,320
31/ஜனவரி/2025 - ரூ. 61,840
30/ஜனவரி/2025 - ரூ. 60,880
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 107-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,07,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.