1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்..!

1

தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி கற்பிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை தெலுங்கானா அரசு அனுப்பி வைத்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க உத்தரவிட்டார். 

இந்நிலையில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதல்வர் சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தால் 28,000 அரசு பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர். 

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மெனுவையும் பள்ளிக் கல்வித் துறை தயாரித்துள்ளது. அதன்படி, திங்கள் கிழமை கோதுமை ரவா உப்மா மற்றும் சட்னியும், செவ்வாய் கிழமை அரிசி ரவா கிச்சடியுடன் சட்னியும் வழங்கப்படவுள்ளது. 

புதனன்று பம்பாய் ரவா உப்மா மற்றும் சட்னி, வியாழன் கிழமை ரவா பொங்கல் மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமை தினை ரவா கிச்சடியுடன் சாம்பார், சனிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி மற்றும் சட்னி மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like