1. Home
  2. தமிழ்நாடு

நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு நான் செல்கிறேன் - கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி..!

1

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது.

சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தன் இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார்.

தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சிம்பு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்., நடிகர் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு எனது இதயம் உடைந்தது. அனைவரையும் ஒருவராக பார்க்கும் குணம் கொண்டவர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் திரையிலும், நிஜவாழ்விலும் ஹீரோதான். விஜயகாந்தை நான் ஒரு சகோதரராகப் பார்த்தேன். மக்கள் மனதில் என்றும் வாழும் சகாப்தம் விஜயகாந்த். என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்., 'அலை ஓசை இருக்கும் வரை உங்கள் நினைவோசை இருக்கும் கேப்டன், மிஸ் யு கேப்டன்' என்று பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளதாவது., விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன், என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது

“எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை போன்ற வார்த்தைகள் இவருக்கு மட்டும்தான் பொருந்தும். இவரிடம் எந்தளவு பணிவு உள்ளதோ அதே அளவுக்கு நியாயமான கோபமும் உண்டு. அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் மக்கள் பணிக்கு வந்தார் என நம்புகிறேன். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைபோன்ற ஆட்களுக்கு தனிமைதான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு நான் செல்கிறேன்" 

Trending News

Latest News

You May Like