1. Home
  2. தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய ஆதாரம் சிக்கியது..!

1

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினை அடுத்து கடந்த 2017 ஆண்டு நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை கடந்த 10 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 350க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சையான் தரப்பு வழக்கறிஞர் விஜயன்,  ”கொலை, கொள்ளை நடந்த இடத்தில் முக்கிய சான்றாவணங்கள் அழிக்கப்படுகிறது. எனவே, கொடநாடு பங்களாவை நாங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கொலை செய்து, ஓம்பகதூர் கட்டி வைக்கப்பட்டிருந்த மரம் ஏன் வெட்டப்பட்டுள்ளது? பங்களாவில் ஜெயலலிதா அறையில் உடைக்கப்பட்ட பூட்டு எங்குள்ளது? என்று கேள்விகளும் மனுவில் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பங்களாவின் முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர்.

அதனை உதகை நீதிமன்றத்திலும் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்துள்ளனர். இந்த உடைக்கப்பட்ட பூட்டு ஜெயலலிதா அறையில் கொள்ளை நடந்துள்ளதற்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like