1. Home
  2. தமிழ்நாடு

திருமணமான 21 நாளில்...நம்பவே முடியாத சம்பவம்..!

1

காதல் திருமணம் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து வைத்து செய்யும் திருமணம் என்றாலும் சரி, இரண்டிலுமே ஒரு சிக்கல் உள்ளது. பெண்ணை பற்றியோ, மாப்பிள்ளை பற்றியோ சரியான புரிதல்கள் திருமணத்திற்கு முன்பு இருக்காது. அதேபோல் வாழப்போகும் வீடு பற்றியும் சரியான புரிதல்கள் இருக்காது. கலாச்சாரம், பழக்க வழக்கம், வாழ்வியல் முறை எல்லாமே வித்தியாசமான சூழலில் இருக்கும். இதனை ஏற்றுக்கொண்டு பெண்கள் வாழ வேண்டிய நிலை இருக்கிறது. அதேநேரம் ஈகோ ஏற்பட்டால் குடும்பத்தில் பெரிய சிக்கலே வந்துவிடும்.

கணவன் மனைவி இடையே ஈகோ ஏற்பட்டு இருவருமே விட்டுக்கொடுத்து செல்லாமல் போனால், அவர்கள் குடும்பத்தில் பெரிய சிக்கலே வந்துவிடும். திருமணமான புதிதில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்போது பிரச்சனைகளை பக்குவமாக கையாண்டு, என்னவெல்லாம் நியாயமான எதிர்பார்ப்பு என்பதை இருவருமே புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் என்னவெல்லாம் தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என்பதை இருவரும் பக்குவமாக கையாள வேண்டும்..அப்படி கையாண்டால் சில நாளிலேயே உறவுகளில் பிரச்சனை வராது. மாறாக துணையை அடிமை போல் நடத்த வேண்டும் என்று ஆண் அல்லது பெண் விரும்பினால் கண்டிப்பாக அது பிரச்சனையில் தான் முடியும். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த 29 வயதாகும் பாண்டித்துரை என்பவருக்கும், சிவகங்கை தாலுகா உசிலம்பட்டியை சேர்ந்த 19 வயதாகும் பூமிகா என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன் வீட்டில் பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.இதை பார்த்து ஆடிப்போன உறவினர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் பூமிகாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், பூமிகா தூக்கிட்டு உயிரை விட்டது தெரியவந்தது. திருமணமான பின்பும் பூமிகா கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவருக்கும் அவரது கணவர் பாண்டித்துரைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதுதான் காரணமா? வேறு காரணம் உள்ளதா? என்ற கோணங்களிலும் தீவிர விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் ஆயுஷ் வெங்கட் மேல் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 21 நாளில் கல்லூரி மாணவி உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like