2022-ஆம் ஆண்டு அனுமதி கோரிய நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல்..!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்கியுள்ளார். அதேபோல், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் மீதான வழக்கிலும் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள் 580 பேரை முன் கூட்டியே விடுதலைச் செய்யக்கோரிய மசோதா பேரவையில் நிறைவேற்றி தமிழக அரசு அனுப்பிய 165 ஆயுள் தண்டனை கைதிகளின் மனுவை ஆளுநர் நிராகரித்துள்ளார். அதேசமயம், 362 பேரை முன்விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், 53 பேரின் மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.