1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : வெள்ளதுரை சஸ்பெண்ட் உத்தரவு ரத்து..!

1

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இருந்தபோது, சந்தன கடத்தல் வீரப்பனை கைது செய்வதற்காக சிறப்புப் படையில் பணியமர்த்தப்பட்டவர் வெள்ளதுரை.அப்போது அவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த காவல் ஆய்வாளராக இருந்தார். பின்னர் இதில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இரட்டிப்பு பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்பியாக உயர்ந்தார். இந்தச் சம்பவம் 2004ஆம் ஆண்டு நடைபெற்றாலும், 2003 ஆம் ஆண்டே உள்ள அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்து பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தின் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் வழக்கில் தொடர்புடைய ரவுடி மற்றும் மதுரையில் உதவி ஆய்வாளர்களை குத்திய ரவுடிகள் ஆகியோரின் முக்கிய என்கவுண்டர்களில் பேசப்பட்டவர் வெள்ளதுரை.

இதன் பிறகு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளதுரை என அறியப்பட்டார். தற்போது 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், சென்னையில் கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தும் குழுவினர் மற்றும் முக்கிய தொழில்துறையினருக்கு அச்சுறுத்தும் நபர்களை குறிவைத்து கண்காணிக்கும் சிறப்பு குழுவில் பணியமர்த்தப்பட்டார் வெள்ளதுரை.

அதேநேரம் அவர், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக இருந்து வந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் உள்துறை ஏடிஎஸ்பி வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் போலீஸ் காவலில் இருந்தபோது ராமு என்கிற குமார் என்கிற கொக்கி குமார் மரணம் அடைந்த வழக்கில் வெள்ளத்துரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளதுரை மீது சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்துள்ளனர். சிபிசிஐடி பிரிவில் வெள்ளதுரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளதுரை என்கவுன்டர் செய்தார்

Trending News

Latest News

You May Like