1. Home
  2. தமிழ்நாடு

இனி கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை..!

1

யுஜிசி 571வது கூட்டத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர படிப்பு (ஓடிஎல்) மற்றும் இணையவழி படிப்பில் இருமுறை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வழக்கமாக, ஜூலை-ஆகஸ்ட்டில் தொடங்குகிற கல்வியாண்டு மே-ஜூனில் முடிவடையும். அடுத்தகட்ட மாணவர் சேர்க்கை நடவடிக்கை ஜனவரியில்தான் தொடங்கும்.

இதனால் கூடுதலாக 19,73,056 மாணவர்கள் ஜூலை 2022ல் சேர்ந்ததாகவும் ஜனவரி 2023ல் 4,28,854 மாணவர்கள் படிப்புகளில் சேர்ந்ததாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் இருமுறை சேர்க்கை கட்டாயமில்லை எனவும் போதிய கல்வி வசதிகள் மற்றும் பயிற்றுநர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் யுஜிசியின் தலைவர் மமிதலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்திய பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை மேற்கொள்வது மாணவர்களுக்குப் பெரிதும் பலனளிக்கும்.

“ஜூலை, ஆகஸ்டில் வெவ்வேறு காரணங்களால் பல்கலைக்கழகங்களில் சேர முடியாத மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல் தங்கள் படிப்பைத் தொடர முடியும்,” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like