1. Home
  2. தமிழ்நாடு

ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது ஆதித்யா- எல்1 விண்கலம்!

1

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “சூரியனை ஆய்வுச் செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாகப் பிரிந்தது. சரியாக, 648 கி.மீ. உயரத்தில் ராக்கெட்டில் இருந்து ஆதித்யா- எல்1 விண்கலம் தனியாகப் பிரிந்தது.

சுமார் 2,298 கி.மீ. உயரத்தில் இருந்து ஆதித்யா விண்கலம் தனித்து தனது பயணத்தைத் தொடர்கிறது. புவி சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா- எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா- எல்1 விண்கலம் சரியான சுற்றுவட்டப்பாதையில் செல்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூர பயணத்திற்கு பின் விண்கலம் எல்1 புள்ளியை அடையும்.

விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சரியாக செயல்படத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆதித்யா- எல்1 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like