1. Home
  2. தமிழ்நாடு

சூரிய புயலை கச்சிதமாக படமெடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்..!

Q

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய எந்த விண்கலமும் அனுப்பப்படவில்லை. ஆதித்யா எல்1 தான் முதல் விண்கலம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணித்து, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்'(எல்-1) எனும் இடத்தில், சூரியனை பார்த்தவாறு சமீபத்தில்தான் நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் விண்கலத்தில் உள்ள கருவிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன. அதாவது, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) மற்றும் விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC) ஆகிய கருவிள் சூரிய புயல்களை தெளிவாக படம்பிடித்திருக்கிறது. கடந்த மே மாதம் 10-11 தேதிகளில் சூரியனிலிருந்து சூரிய புயல் வெளிவந்தது. இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனை சர்வதேச நாடுகளை சேர்ந்த விண்கலன்கள் படம் பிடித்தன. ஆனால் ஆதித்யா எல்-1-ஆல் படம் எடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 14ம் ஆதித்யா எல்-1-ன் SUIT மற்றும் VELC கருவிகள் சூரிய புயல்களை பல்வேறு கோணங்களில் தெளிவாக படம்பிடித்தது. இதில் சூரியனின் காந்த பகுதிகளை தெளிவாக பார்க்க முடிகிறது. அதேபோல சூரிய புள்ளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதித்யா தெளிவாக படம் பிடித்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like