'ஏகே 64' படத்தின் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்..!
15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, மகத், வைபவ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படத்தை பார்த்தனர்.
படத்தை பார்த்து வெளியே வந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 64’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, ‘ஏகே 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும், பல சர்ப்ரைஸ்களுடன் எண்டர்டெயினிங் திரைப்படமாக உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் அப்டேட்கள் விரைவில் தொடர்ந்து வெளியாகும் என்றும் கூறினார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும், கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.