ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பி செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், மதுவிலக்குப் பிரிவை கூடுதலாக கவனிப்பார். கீழ்பாக்கம் துணை கமிஷனர் கோபி, மதுவிலக்கு வடக்கு மண்டல எஸ்பியாக மாற்றம்.