முதலீட்டாளர்கள் சோகம் - அதலபாதாளத்தில் சரிந்த அதானி குழம பங்குகள்..!
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நேற்று தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையான BSE குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை NSE குறியீட்டு எண்ணான நிப்டி (Nifty) 47 புள்ளிகள் குறைந்து 24,320 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
அண்மையில், ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்திற்கு சொந்தமான எல்லா நிறுவன பங்குகளும் சரிவடைந்துள்ளன. அதன்படி அதானி என்டர்பிரைசஸ்(adani enterprises), அதானி போர்ட்ஸ்(adani Ports), அதானி பவர்(adani Power), அதானி என்ர்ஜி(adani energy) உள்ளிட்ட பங்குகளின் விலைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
அதானி குழும பங்குகள் சுமார் 7% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்குச் சுமார் 53,000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சரிந்த வேகத்திலேயே மீண்டும் பங்குகள் ஏற்றம் கண்டும் வருகின்றன. ஏனவே, உண்மையான இழப்பு எவ்வளவு என்பது பிற்பகலில் தான் தெரியவரும்.
அதானி குழுக பங்குகளின் வீழ்ச்சி எதுவரை செல்கிறது என முதலீட்டாளர்கள் அவதானிக்க வேண்டும் எனப் பங்குசந்தை நிபுனர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், புதிய வீழ்ச்சிக்குப் பங்குசந்தை செல்கிறதா எனப்தை ஆராய்ந்து அடுத்த முதலீட்டைச் செய்ய வேண்டும் என்கின்றனர்.இன்றைய சந்தையின் தொடக்கமும், முடிவும் அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
(SEBI)செபியின் தலைவர் மதாபி பூரி புச் (Madhabi Puri buch) மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் அதானியின் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தது. இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தங்கள் எக்ஸ் கணக்கை SEBI லாக் செய்து வைத்துள்ளது. ஹிண்டன்பர்க்-ன் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. செபியின் தலைவர் மாதபி புரி புச்சும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.