1. Home
  2. தமிழ்நாடு

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் நடிகை த்ரிஷா!

1

 நடிகை த்ரிஷா இன்று காலை தவறாமல் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வழக்கமாக தனது தாயாருடன் வாக்களிக்க வருவார் நடிகை த்ரிஷா. இந்த முறையும் இருவரும் வந்து வாக்களித்தனர்.

சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் நடிகை த்ரிஷா தனது வாக்கை செலுத்தினார். அங்கிருந்தவர்கள் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட, அங்கிருந்த சிலருடன் புகைப்படம் எடுத்த நடிகை பின் புறப்பட்டு சென்றார்.


 


 

Trending News

Latest News

You May Like