1. Home
  2. தமிழ்நாடு

நடிகை தமன்னா அட்வைஸ்..! வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம்..!

1

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். இவருக்கும், இந்தி நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஹோலி பண்டிகையில் தனித்தனியாக கலந்து கொண்டார்கள். இருவருமே நண்பர்களுக்கு காதல் முறிவு விருந்து கொடுத்ததாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பாக பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த பதிவில், ”வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

காதல் தோல்வி வேதனையில் இருந்து மீள்வதற்காக இந்த பதிவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசுகிறார்கள். தைரியமாக இருங்கள். காதல் தோல்வி வேதனையில் இருந்து நீங்கள் மீளவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதில் பதிவு வெளியிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like