பிரபல நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா... தமிழ், தெலுங்கில் பல சூப்பர் டூப்பர் படங்களில் நடித்தவர்.. தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2021-ம் ஆண்டு தம்பதி இருவருமே பிரிந்துவிட்டனர். இதனால் தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானர்கள்.
இந்நிலையில், தெலுங்கு - ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. "அதை குறிக்கும் விதமாக, 'Until we meet again Dad' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு "மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா" என கனத்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார் சமந்தா.