1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவமனையில் நடிகை சமந்தா அனுமதி..! என்னாச்சு ?

1

பிரபல நடிகை சமந்தா, தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் கலக்கி வருகிறார். அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது   ஜிம் ஒர்கவுட்டில் மரண மாஸ் காட்ட தொடங்கிய சமந்தா மயோசிட்டிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளால் அவர் மனதளவிலும் சோர்ந்திருந்தார். இதனால் விஜய் தேவர்கொண்டா உடன் சமந்தா நடித்து வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிகிச்சைகளுக்கு பிறகு கம் பேக் கொடுத்த சமந்தா படப்பிடிப்பை தொடங்கினார். வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடித்து முடித்தார்.

குஷி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் நடிப்பதில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. 

இந்நிலையில் சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் புகைப்படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து,  என்ன காரணத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பூஸ்டரின் நன்மைகள் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

1

Trending News

Latest News

You May Like