நடிகை ரோஜா நகரியில் மீண்டும் போட்டி..?
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், இடுப்புலபாயாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகரின் நினைவிடத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதனை முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான தர்மான பிரசாத் ராவ் பட்டியலை படித்தார். அதில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 எஸ்சி, 7 எஸ்டி, 48 பிசி, 91 ஓசி பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மைனாரிட்டி 7, 19 பெண்கள் உள்ளனர். 25 மக்களவைத் தொகுதிகளில் 4 எஸ்சி, 1 எஸ்டி, 11 பிசி, 9 ஓசி பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் 5 பேர் உள்ளனர். இந்த பட்டியலில் அனகப்பள்ளி மக்களவை தொகுதியில் மட்டும் வேட்பாளர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேட்பாளர்களில் புலிவேந்துலா தொகுதியில் ஜெகன்மோகன், நகரி தொகுதியில் நடிகையும் அமைச்சருமான ஆர்.கே.ரோஜா, புங்கனூர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, காளஹஸ்தி மதுசூதன், மங்களகிரி லாவண்யா, குப்பம் பரத் உள்ளிட்டோர் உள்ளனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி வேட்பாளர்கள்
- ஸ்ரீகாகுளம் - பேராட திலக்
- விஜயநகரம் - பெல்லானா சந்திரசேகர்
- விசாகப்பட்டினம் - டாக்டர் போட்சா ஜான்சி லக்ஷ்மி
- அனகப்பள்ளி -
- அரக்கு - செட்டி தனுஜா ராணி
- காக்கிநாடா - சலமலசெட்டி சுனில்
- அமலாபுரம் - ராபக்க வர பிரசாத்
- ராஜமுந்திரி - டாக்டர் குடுரி ஸ்ரீநிவாசுலு
- நரசாபுரம் - குடூரி உமா பாலா
- ஏலூர்- கருமுரி சுனில் குமார்
- மச்சிலிப்பட்டினம் - டாக்டர் சிம்ஹாத்ரி சந்திரசேகரா
- விஜயவாடா - கேசினேனி னிவாஸ்
- குண்டூர் - கிலாரி வெங்கட ரோசய்யா
- நரசா ராவ்பேட்டை - டாக்டர் அனில் குமார்
- பாபட்லா - நந்திகம் சுரேஷ் பாபு
- ஓங்கோல் - செவிரெட்டி பாஸ்கர்
- நெல்லூர் - வேணும்பாகா விஜய சாய்
- திருப்பதி - மத்தில குருமூர்த்தி
- சித்தூர் - என்.ரெடப்பா
- ராஜம்பேட்டை - பெத்திரெட்டி வெங்கட மிதுன்
- கடப்பா - ஒய்எஸ்.அவினாஷ் 22 கர்னூல் - ராமையா
- நந்தியாலா - போச்சா பிரம்மானந்த 24 இந்துபூர் - ஜோலடராசி சாண்ட்
- அனந்தபூர்- மலகுண்ட்லா சங்கரா நாராயணா.