1. Home
  2. தமிழ்நாடு

நடிகை ரேகா நாயரின் கார் மோதி ஒருவர் பலி..!

Q

சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் அன்னை சத்யா நகர் எனும் பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மஞ்சன் (வயது 55). இவர் நேற்று மாலையில் ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள ரோட்டில் படுத்து கிடந்தார்.

இந்த வேளையில் திடீரென்று ஒரு கார் வந்தது. அப்போது ரோட்டில் படுத்து கிடந்த மஞ்சனை கார் டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கார் அவரது மார்பில் ஏறி இறங்கி சென்றுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மஞ்சனை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மஞ்சன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பான புகாரின் கிண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். அப்போது மஞ்சன் மீது ஏறி இறங்கி சென்ற காரின் பதிவெண் கிடைத்தது.

இதையடுத்து அந்த பதிவெண்ணை அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார் சீரியல் நடிகையான அடையாறில் வசித்து வரும் ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர் நாயகர், வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 

விபத்து தொடர்பாக சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான பாண்டி ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.

Trending News

Latest News

You May Like