#JUST IN : நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி..!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.
ரன்யா ராவ் அண்மை காலமாக அடிக்கடி துபாய்க்கு சென்று வந்தார். கடந்த மார்ச் 3ம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து டெல்லி நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.12 கோடியாகும். இதனிடையே வீட்டில் நடத்திய சோதனையில் 4.75 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டிருந்தது.
அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, தங்கம் கடத்தல் வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும், தனக்கு பின்னால் தொழில்அதிபர், ஓட்டல் உரிமையாளர், அரசியல் பிரமுகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் காரணமாக பெங்களூர் தொழில் அதிபர் தருண் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ரன்யா ராவை தங்கம் கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதாவது ரன்யா ராவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் யாரிடமும் சிக்க வாய்ப்பு இல்லை என்பதற்காக அதனை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகை வியாபாரிகளுக்கு வழங்கி வந்தாகவும் , இதற்காக அவர்கள் ரன்யா ராவுக்கு பணம் அனுப்பி வைத்து வந்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியான தருணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.