1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளேன் - நடிகை ரஞ்சனா நாச்சியார்..!

Q

ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட அறிக்கையில், “தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் பாஜகவில் இருக்க வேண்டுமா என கேள்வியெழுப்பியது. தேசியமும், தெய்வீகமும் குறுகிய வட்டத்தில் சுருங்கிப் போவதில் உடன்பாடு இல்லை.
என்னைப் பொருத்தவரை மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு இயங்க முடியவில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறிவிட்டது. பெண்களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பொறுப்பில் இருந்து விலகியதற்கான சில காரணங்களைச் சொல்ல முடியும், சிலவற்றை சொல்ல முடியாது.
நிதி கொடுக்க மாட்டோம் என்னும் போக்கை ஆணவமாகவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவுமே பார்க்கிறேன். இதற்கான எதிர்ப்பை பாஜக மாநிலத் தலைவர் முன்னெடுத்திருக்கலாம். ஆனால், அவரே மத்திய அரசின் முடிவுக்கு உடன்படுகிறார். விலகுவதற்கான எவ்வித அழுத்தமும் இல்லை. விரைவில் அடுத்த பயணம் குறித்து அறிவிப்பேன்” என்றார்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகிய நிலையில், தற்போது தவெகவில் இணைய அக்கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வருகை தந்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.
மேலும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் இனி தமிழகத்தின் வெற்றிக் களமாக மாறப்போகிறது. அதில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என முடிவெடுத்து இன்று தவெகவில் இணைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like