நடிகை ஓபனாக கூறிய பிரசன்னா : சினேகாவுக்கு அரிய வகை நோய்..!

என்னவளே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சினேகா-பிரசன்னா.
இப்படத்தை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா என நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார்.
பிரசன்னாவை திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தவர் கடந்த 2020ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த பட்டாஸ் படத்தில் நடித்தார். விஜய்யின் கோட் படத்தில் நடித்தவர், கடைசியாக டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
தற்போது சமூக வலைதளங்களில் பிரசன்னா-சினேகா கொடுத்த பழைய பேட்டி வலம் வருகிறது. அதில் சினேகா தனக்கு ஓசிடி பிரச்சனை இருப்பதாக கூறி உள்ளார்.
அவரது பேச்சுக்கு உடனே பிரசன்னா, ஆமாம் வீட்டையே 3 முறை மாற்றி இருக்காங்க, அதேபோல் அவங்க மாத்தாம இருக்கும் ஒரே விஷயம் என்றால் அது நான் தான் என கிண்டலாக பேசியுள்ளார்.
எல்லாம் கிளீனாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும் இதனால் பெரியதாக அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.