ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பிரணிதா..! குவியும் வாழ்த்துக்கள்..!
சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரணிதா. கடந்த 2021ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு 2022ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து மகளுடன், தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார் பிரணிதா.
இந்த நிலையில் நடிகை பிரணிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே அவருக்கு ஆர்னா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், தொடர்ந்து படத்தில் நடிக்க விரும்புவதாகவும், விரைவில் நடிப்புத் தொழிலுக்கு திரும்புவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.