1. Home
  2. தமிழ்நாடு

ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி - நடிகை நயன்தாரா..!

1

தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌ இன்றியமையாதது. அதனால்‌, அந்த படங்கள்‌ குறித்த நினைவுகளும்‌, ஆவணப்படத்தில்‌ இடம்பெற வேண்டும்‌ என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல்‌ தடையில்லா சான்றிதழ்‌ வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும்‌ நன்றியோடு நினைவில்‌ வைத்துக்‌ கொள்வேன்‌, என தெரிவித்துள்ளார்.

நானும் ரவுடிதான் படக்காட்சியை பயன்படுத்த தனுஷ் தடையில்லா சான்றிதழ் தரவில்லை. தனுஷை காட்டமாக விமர்சித்து நடிகை நயன்தாரா அறிக்கையும் வெளியிட்டிருந்தார். நயன்தாரா நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் பட்டியலில் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை

மேலும் அதில், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தொடங்கி, ரெட் ஜெயன்ட் மூவிஸ், லைகா புரொடக்ஷன்ஸ், ஸ்டூடியோ க்ரீன், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Nayanthara: Beyond the Fairy Tale எனும் நயன்தாராவின் ஆவணப்படம் நவ.18ல் வெளியானது


 

Trending News

Latest News

You May Like