விசாரணை வளையத்தில் நடிகை நவ்யா நாயர்..!

தமிழில் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரனுடன் ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை நவ்யா நாயர்.இவர் கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது, பிலிம் ஃபேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்ற என்னற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதன்பின் கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரி சச்சின் சாவந்த் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சச்சின் சாவந்த் சுமார் 10 முறை கொச்சிக்கு சென்று நவ்யா நாயரை சந்தித்திருப்பதும், அவருக்கு நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமலாக்கத்துறையினர் நவ்யா நாயரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அப்போது, சச்சின் சாவந் தனக்கு நண்பர் மட்டும்தான் என்றும் வேறு எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்றும் நவ்யா நாயர் கூறியதாக தெரிகிறது.