நடிகை நமிதா பாஜக - வின் செயற்குழு உறுப்பினராக நியமனம்...

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களாக நெல்லை நயினார் நாகேந்திரன், நாமக்கல் வி.பி. துரைசாமி, வானதி சீனிவாசன் உள்பட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பைக் கட்சியின் தமிழகத் தலைவரான எல். முருகன் வெளியிட்டுள்ளார்.
துணைத் தலைவர்களாக , மத்திய சென்னை எம். சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி. துரைசாமி, கே.எஸ். நரேந்திரன், வானதி சீனிவாசன், எம். முருகானந்தம், எம்.என். ராஜா, ஏ.ஆர். மகாலட்சுமி, கோவை கனகசபாபதி, புரட்சிக் கவிதாசன்.
பொதுச் செயலர்களாக , கே.டி. ராகவன், ஜி.கே. செல்வகுமார், ஆர். சீனிவாசன், கரு. நாகராஜன்.மாநிலச் செயலர்களாக , கே. சண்முகராஜ், டால்பின் ஸ்ரீதர், டி. வரதராஜன், ஏ. பாஸ்கர், ஆர். உமாரதி, டி. மலர்க்கொடி, பி. கார்த்தியாயினி, பார்வதி நடராஜன், சுமதி வெங்கடேஷ்.
பொருளாளர்களாக , எஸ்.ஆர். சேகர். இணைப் பொருளாளராக , சிவ. சுப்பிரமணியன் , மாநில அலுவலகச் செயலர் எம். சந்திரன் , பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும் ,
மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
Newstm.in