திருவேற்காட்டு கோயில் வாசலில் மடிபிச்சை ஏந்திய நடிகை நளினி..!
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நளினி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது அவர் மடிபிச்சை எடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், எனது இஷ்ட தெய்வம், என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம், எனது உயிராக இருக்கும் தெய்வம் திருவேற்காடு ஸ்ரீகருமாரியம்மன் எனது கனவில் வந்து எனக்கு என்ன செய்ய போகிறாய் என கேட்டாள். என்ன செய்வது என தெரியாமல் மடிப்பிச்சை ஏந்தி, என்னால் முடிந்த காணிக்கையை தருகிறேன் அம்மா என தெரிவித்தேன். இவ்வாறு நளினி தெரிவித்தார். நளினி கோயில் வாசலில் நின்று மடிபிச்சை எடுத்த போது ஏராளமான பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை கொடுத்தனர். நேற்று காலை 6 மணி முதல் அவர் மடிப்பிச்சை ஏந்தினார். விரைவில் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ராமராஜனை காதலித்து நளினி திருமணம் செய்தார். இருவரும் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2000ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்தும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.