என்னாச்சு..? நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேச்சு..!

சீர்காழி அருகே புதிய பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் பேசிய நடிகை மும்தாஜ், "உங்களை எல்லாரையும் பார்த்த பிறகு.. நான் எங்கே இருக்கிறேன்.. எங்கு வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது.. என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன்.. உங்களுக்கு என்னை நன்றாக தெரியும். நீங்கள் நிறைய பேர் என்னை திட்டி இருப்பீர்கள். நிறைய பேர் என்னென்வோ எனக்காக செய்திருப்பீர்கள்..
ஆனால் இன்று பாருங்கள்..உங்கள் முன்னாடி வந்து இஸ்லாமிய பெண்ணாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் ( கண்ணீர் விட்டு அழுகிறார்) .. அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது.. இதற்கு முன்னாடி நான் வெளியில் போய்க்கொண்டிருந்த போது, என்னை சில பெண்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. என்னை இப்படி பார்க்கிறார்கள் என்றால் இறைவன் முன்னாடி எப்படி போய் நிற்பேன் என்று கலங்கினேன்.. இன்று நீங்கள் காட்டிய அன்பை பார்க்கும் போது வார்த்தைகளே இல்லை..
என் வாழ்க்கையில் என்ன தப்பு செய்தேன் என்றால்.. அது விதி இருந்தது.. அந்த பாவம் எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லி விதி இருந்தது என்றார். எல்லாரும் பர்தா அணிவார்கள்.. நான் சிறுவயதில் இருந்தபோது அழகாக இருந்ததாக கூறினார்கள்.. இதனால் நடிக்க சென்றேன். நடிக்க சென்ற போது ஜீன்ஸ் சர்ட் என சிறிய ஆடைகள் அணிந்தேன். அப்போது என்னை எல்லாரும் கீழே பார்ப்பார்கள்.. அப்போது இதுபோல் எனக்கு சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் மாறி இருப்பேன். இப்போது இறைவன் அருளால் இஸ்லாமிய பெண்ணாக நின்று கொண்டிருக்கிறேன்.. " என்று கூறினார்.