நடிகை மீரா மிதுன் கைதாகிறாரா ? - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் !
நடிகை மீரா மிதுன் கைதாகிறாரா ? - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் !

தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார் மீரா மிதுன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.
ஆனால் தவறான தகவல்களை வழங்கி போட்டியில் கலந்து கொண்டதால் அவருக்கு வழங்கிய பட்டத்தை திரும்ப பெற்றது பெமினாஸ் அமைப்பு.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், தன்னுடைய கவர்ச்சியான செல்பி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்களை அழகிப் போட்டிகளுக்கு தயார் செய்யும் பயிற்சி நிறுவனத்தை, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் நடத்தி வருகிறார். தன் மீது அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல்நிலையத்தில் ஜோ மைக்கேல் புகார் அளித்திருந்தார்.
அதில், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா மிதுன் மீது நடிகைகள் ஷனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in