1. Home
  2. தமிழ்நாடு

துணை ஜனாதிபதியை சந்தித்த நடிகை மீனா..! விரைவில் அமைச்சராகிறாரா..?

1

டெல்லிக்கு சென்ற மீனா துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவுக்கு கீழே அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் மேடம் என்று கூறி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு நடிகை ராதிகா, குஷ்பூ போன்றோருக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் மீனாவையும் அமைச்சராக்காக வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் இப்போது மீனா வெளியிட்ட பதிவு அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலரும் கருத்து கூறியிருக்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like