#BREAKING : நடிகை கொல்லங்குடி கருப்பாயி பாட்டி காலமானார்!

பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான கொல்லங்குடி கருப்பாயி அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். பணி இருக்கும் நேரங்களில் மட்டும் சென்னைக்கு வந்து செல்வார்.
ஆண்பாவம், ஆயுசு நூறு, ஏட்டிக்கி போட்டி, கோபாலா கோபாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் இவர். எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார. 1993ல் அவருக்கு அரசு கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி (98) காலமானார்.
இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.