குற்ற உணர்ச்சி செத்தாலும் நீங்காது - நடிகை குஷ்பு வேதனை!

குற்ற உணர்ச்சி செத்தாலும் நீங்காது - நடிகை குஷ்பு வேதனை!

குற்ற உணர்ச்சி செத்தாலும் நீங்காது - நடிகை குஷ்பு வேதனை!
X

இப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை கீழ்ப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் அடக்கம் செய்ய வந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அவமரியாதையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். 

சக மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற தன் உயிரை விட்டவரின்  உடல் அடக்கத்தை படிப்பறிவில்லாத அல்லது ரவுடிகள் அல்லது குண்டர்கள், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கூட்டம் தடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்றும் அவரிடம், அவர் குடும்பத்திடமும் நாம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குஷ்பு பதிவிட்டுள்ளார். 

newstm.in

Next Story
Share it