நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார்..!

மலையாள நடிகை காவ்யா மாதவனின் தந்தை பி. மாதவன், தனது 75வது வயதில் சென்னையில் காலமானார்.இவர் கேரளாவின் காசர்கோடு நீலேஸ்வரத்தை சேர்ந்தவர். இவரது இறுதிச் சடங்குகள் கொச்சியில் இன்று நடைபெறவுள்ளது.
நடிகை காவ்யா மாதவன், மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2009-ல் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்த 2011-ல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து 2016-ல் நடிகர் திலீப்பை 2வது திருமணம் செய்து கொண்டார்.