வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன் - நடிகை கஸ்தூரி!
சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
தெலுங்கர்கள் குறித்து எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.