பிரஸ் மீட்டில் டென்ஷனான நடிகை கஸ்தூரி!
அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி, “பிராமணர்கள் தெய்வத்துக்கு சேவை செய்கிறார்கள். எப்படி ஆரிய பண்பாடு தமிழ்நாட்டுக்கு வரும்போது, சத்ரியர்கள், வன்னியர்கள், செட்டியார்கள் என இணைந்து கொண்டார்களோ அதேபோல் கோவில் பணிகளை செய்ய, ஐயங்கார்கள், ஐயர்கள், சைவ பிள்ளையார்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர். 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்” என பேசினார்.
தெலுங்கர்கள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
“பொய்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.. தெலுங்கு மக்களை நான் அப்படி சொல்லவே இல்லை.. எனது பேச்சை திரித்து திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்... என் புகுந்த வீடு தெலுங்கு. என் மகள்களுக்கு தமிழும், தெலுங்கும் இரு கண்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். இனவாதத்தை நான் பேசவில்லை. தெலுங்கு இனம் என்றோ தெலுங்கு மக்கள் என்றோ நான் சொல்லவில்லை. வந்தேறி என பிராமணர்களை சொல்பவர்கள் தமிழர்களா? என்று தான் கேட்கிறேன்” என்றார்.
அப்போது அவர், "கஸ்தூரி ஒரு ஓசிக்குடிகாரி.. பைவ் ஸ்டார் ஓட்டலில் அவுங்க செலவில் தான் குடித்தேன் என்று ஒரு புறம்போக்கு.. பொம்பள என்று சொல்ல முடியாது. பொம்பள உருவில் உள்ள தீய சக்தி சொல்லுது. இந்த பொய் சரி? எனது பேச்சை திரித்து திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது" என்று ஆத்திரம் பொங்க பேட்டியளித்துள்ளார்.