1. Home
  2. தமிழ்நாடு

நடிகை கஸ்தூரி சவால்..! ஆந்திரா அரசியலில் குதிக்கிறேன்..!

1

சென்னையில் நடைபெற்ற பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியாமல்.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்றும் நடிகை கஸ்தூரி பேசினார். நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜக டெல்லி மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இதனையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்த நடிகை கஸ்தூரி, பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லும் திக, திமுக, திமுகவுடன் வெட்கமே இல்லாமல் சேர்ந்திருக்கும் கட்சிகளைத்தான் அப்படி சொன்னேன். தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி நான் சொல்லவே இல்லை. நான் பேசியதை திரித்து எனக்கு எதிராக தெலுங்கு மக்களை திருப்பிவிட முயற்சிக்கின்றனர் என்றார்.

மேலும் இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன். நான் தமிழக பாலிட்டிக்ஸில் இன்னும் அறிவிக்கவில்லை. அதுக்கு முன்னாடி நான் ஆந்திரா பாலிட்டிக்ஸில் குதிக்கிறேன். என்னை தெலுங்கு மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்தீங்கதானே.. ரொம்ப தேங்க்ஸ். வாய்ப்புக்கு நன்றி என்றார் நடிகை கஸ்தூரி.

Trending News

Latest News

You May Like