மன்னிப்பு கோரினார் நடிகை கஸ்தூரி..!
தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு விளக்கம் தெரிவிப்பதற்காக இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய நடிகை கஸ்தூரி,”அந்தப்புரம் குறித்து தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. திராவிட சிந்தாந்தம் பேசுபவர்களைத்தான் சொன்னேன். பிராமணர்களை சொல்பவர்களை தான்நான் சொன்னேன். ராஜா தர்பாரில் ஆடல் அரசியலுக்கு இசை மற்றும் சங்கீத வாத்தியங்கள் வாசிப்பவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள்? என்று கலைஞர் குறிப்பிட்டு கேட்டார்” என கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பதி லட்டை தின்றவர்கள் தானே இனிமேல் நீங்கள் மாட்டுக்கறியை திங்கலாமே எனக் கூறிய போது ஊடகவியலாளர்கள் எங்கே சென்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”கடவுள் மறுப்பு பேசக்கூடியவர்கள், நாத்திகம் பேசக்கூடியவர்கள் கொக்களிக்கின்றனர். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை பழிவாங்கி பேசக்கூடாது. தெலுங்கு மக்களுக்காக நான் பேசுகிறேன், எனக்கு அதற்கான உரிமை இருக்கிறது. சுதாகர் ரெட்டி மற்றும் அமர்பிரசாத் என்னுடைய கருத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கன் தெலுங்கர்தான், ஆனால் தமிழர் இல்லை. இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் அவர்.