1. Home
  2. தமிழ்நாடு

நடிகை கங்கனா ரணாவத்,சௌமியா அன்புமணி முன்னிலை..!

1

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படத் தொடங்கியுள்ளது. 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலை 9.05 மணி நிலவரப்படி தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான பாமகவின் சௌமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார். திமுகவின் மணி மற்றும் அதிமுகவின் அசோகன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் முன்னிலை வகித்து வருகிறார். இது அவர் போட்டியிடும் முதல் தேர்தலாகும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் விக்ரமாதித்யா சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் பிரகாஷ் சந்த் பரத்வாஜ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like