1. Home
  2. தமிழ்நாடு

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய நடிகை..!

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய நடிகை..!



நடிகை டென்லா டேவிஸ் விதார்த் பாரதிராஜா கூட்டணியில் உருவான அருமையான திரைப்படமான "குரங்குபொம்மை" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.திரைப்படத்துக்கு பிறகு இவர் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடக்கக்கவில்லை. கூடிய சீக்கிரம் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் புதிய அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.


பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியான சன் டிவியில் சில நாட்களில் தொடங்க இருக்கும் "அன்பே வா" என்ற சீரியலில் இவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். பொதுவாக அனைத்து நபர்களும் சின்னத்திரையிலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி திரைத்துறைக்கு செல்வார்கள்.

ஆனால் இந்த நடிகை பெரிய திரையில் தோன்றி பிறகு சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.சன் டிவியில் கூடிய சீக்கிரமே ஒளிபரப்பாக போகும் அந்த சீரியலின் ப்ரோமோஷன் வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

சரி கம பா இந்தியா லிமிடெட் சார்பாக விஜயலட்சுமி என்பவர் இந்த சீரியலை தயாரிக்கிறார். இமானுவேல் இந்த தொடரை இயக்க. ராஜேஸ்வரி என்பவர் திரைக்கதை எழுதியுள்ளாராம்.சீக்கிரமே இந்த சீரியலில் தோன்றி அனைவர் மனதையும் கொள்ளை அடிக்க காத்திருக்கும் அந்த நடிகைக்கு இப்பொழுது பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like