1. Home
  2. தமிழ்நாடு

நடிகை ஹேமமாலினி மனு தாக்கல்..!

1

பாலிவுட்டில் கனவுக்கன்னி  என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 

மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அவர் களம் காண்கிறார். 75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஹேமமாலினி மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அம்மாநில நீர் சக்தித்துறை அமைச்சர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் உடனிருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஹேமமாலினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

மதுரா தொகுதியின் வளர்ச்சிக்காக மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். மீதமுள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன். மேலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் மதுராவில் உள்ள யமுனா நதியை சுத்தப்படுத்தும் பணியை முடிப்பதும், 84 கோசி பரிக்ரமா பாதை மற்றும் ரெயில் பாதை அமைப்பது ஆகிய முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் பாராமன்ற தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று (5-ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8-ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். 

Trending News

Latest News

You May Like