1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் காயத்ரி ரகுராம் ட்வீட்..? பாஜகவை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள்...

1

பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பெண்களுக்கு எதிராக பாஜகவில் பல பிரச்சினைகள் நடப்பதாக ட்விட்டரில் பதிவுகளை போட்டிருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவுக்கும் டெய்சி சரணுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.டெய்சியை திருச்சி சூர்யா சிவா தவறான வார்த்தைகளை கேட்டதும் பாஜக மூத்த தலைவர் ஒருவருடன் டெய்சியை தொடர்புபடுத்தி பேசியதும் பதிலுக்கு திருச்சி சூர்யாவின் குடும்பத்தினரை டெய்சி மிக மோசமாக பேசியதும் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இதை எதிர்த்து காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார். இதனிடையே கடந்த ஆண்டு நடந்த காசி தமிழ் சங்கமத்திற்கு பாஜகவின் தமிழ் பிரிவு பொறுப்பில் இருந்த தன்னை அண்ணாமலை அழைத்து செல்லவில்லை என வெளிப்படையாக ஆதங்கத்தை காயத்ரி வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவாவை கண்டித்து காயத்ரி போட்ட ட்வீட்டும் பிரச்சினையாக வெடித்தது. அதாவது சொந்த கட்சிக்காரரையே விமர்சிக்கிறார் என காயத்ரி மீது அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார் என காயத்ரியை கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்குவதாக அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் காயத்ரி ரகுராம். இதையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம், தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது ஆதரவாளர்கள் என விளாசி வரும் காயத்ரி ரகுராம் தேசிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. அமித்ஷா, பிரதமர் மோடி என பாஜக மேலிடத்தையும் சரமாரியாக சாடி வருகிறார். பாஜக சார்ந்த எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதல் ஆளாக கருத்து கூறி வரும் காயத்ரி ரகுராம், பாஜகவை தனது சமூக வலைதள பக்கத்தில் வச்சு செய்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 138ஆம் ஆண்டை முன்னிட்டு அக்கட்சிக்கு 1380 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் காயத்ரி ரகுராம். மேலும் நன்கொடை அளித்ததற்கான ரசீதை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள காய்த்ரி ரகுராம், பாஜகவை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.கவை நாங்கள் விரும்பவில்லை.

எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


 

null


 

Trending News

Latest News

You May Like