1. Home
  2. தமிழ்நாடு

நடிகை தாரணி ஹோம் டூர் வீடியோ! புடவைக்கு மட்டும் 6 பீரோவா..?

1

சென்னையை சேர்ந்த நடிகை தாரணி, 15வயதில் சினிமாவில் அறிமுகமானார். 1988ஆம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில், கமலின் தங்கையாக நடித்தார். தொடர்ந்து பாலைவன பறவைகள், சின்ன வாத்தியார், கிழக்கு வீதி, வைகறை பூக்கள், பெரிய மருது போன்ற ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியவர்.

விஷ்ணு, பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், சூர்ய வம்சம், அஜித் நடிப்பில் 1998ல் வெளிவந்த காதல் மன்னன், எதிரும் புதிரும், பிரியமான தோழி,துள்ளாத மனமும் துள்ளும், மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார். தாரணியின் பிரபலமான காமெடி கேரக்டர் எதிரும் புதிரும் படத்தில் கவுண்டமனியின் தங்கையாக நடித்திருந்ததுதான். அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக மாலா கேரக்டரில் நடித்திருப்பார்.

கிட்டதட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை தாரணி, 1997 ஆண்டு முதன் முதலில் மங்கை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் தாரணி. அதன்பிறகு ஷக்தி, திருவிளையாடல் புராணம், சொர்க்கம், முகூர்த்தம் என 30 மெகா சீரியல் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் நேதாஜி, சுந்தர்.சி நடிப்பில் தீ, அர்ஜூன் நடிப்பில் மாசி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் கிச்சாவை தாரணி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வரும் தாரணி, சென்னை ராமாபுரததில் வசித்து வருகிறார். அவரின் ஹோம் டூர் வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் ஆனது முதல் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ள தாரணி, தனக்கு திருமணம் ஆகும்போது 30 வயது. எங்கள் வீட்டில் ஐயர் மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் இவரை காதலித்தேன். இரு வீட்டிலும் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. அதன்பிறகு ஒரு வழியாக 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவரும் மகளும் அசைவ பிரியர்கள். ஆனால் நான் சுத்த சைவம்.

இந்த வீட்டில் எனது சேலை வைப்பதற்கு மட்டும் 6 பீரோ இருக்கிறது. இதுவே அதிகம் என்று கணவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சம்பாதிப்பது எல்லாம் புடவைக்கும் நகைக்குமே போய்க்கொண்டு இருக்கிறது. இதோடு நிறுத்திக்கொள் என்று தனது கணவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தாரணி ஜாலியாக கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like