1. Home
  2. தமிழ்நாடு

80 காலகட்டத்தில் காமெடியில் கலக்கிய நடிகை 'பிந்து கோஷ்' காலமானார்..!

Q

நடிகை பிந்து கோஷ். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்டுவந்தார்.
அவருக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில் மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படுவதாக பல பேட்டிகளில் பேசியிருந்தார். அவரின் நிலையை தெரிந்து கொண்ட நடிகர் விஷால், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பிந்து கோஷூக்கு உதவி செய்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like