உயிருக்கு ஆபத்தான நிலையில் நடிகை அருந்ததி நாயர்! உதவி கேட்டும் கையேந்தும் சக நடிகை..!
நடிகை அருந்ததி நாயர், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர். தமிழில் இவர் பொங்கி எழு மனோகரா படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து பிஸ்தா, விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உரிய அங்கீகாரத்தை பெற்றார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக விதார்த் நடிப்பில் வெளியான ஆயிரம் பொற்காசுகள் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் ஒன்று மோதி இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அருந்ததி நாயர் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என அருந்ததியின் தோழியும், மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.