கொரோனா விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கைது!
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறி தனது பிறந்தநாளை கொண்டிய நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய அரேபிய நடிகை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் அவரது பெயரை வெளியிடால் எம்.ஹெச் எனக் குறிப்பிட்டுள்ளன.
இரண்டு உணவகங்களில் அவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பிறந்த நாள் விருந்துகளை நடத்தியுள்ளார். இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த காட்சிகளைக் கண்ட காவல்துறையினர், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக அவரை கைது செய்துள்ளனர். அந்த நடிகைக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகளை மீறி திருமணச் சடங்குகளில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
newstm.in