1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்த பிரபல நடிகை..!

Q

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை மிமி சக்ரவர்த்தி கடந்த மக்களவைத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறை எம்.பி ஆனார். இந்நிலையில்,மிமி சக்ரவர்த்தி அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

தன்னுடைய எம்பி பதவியையும் ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம் வழங்கினார் மிமி. புகழ்பெற்ற நடிகையான இவர், சொந்த கட்சியினரே தான் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். அரசியல் தனக்கானது இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like