நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான வித்யா குத்தி கொலை...கணவருக்கு வலைவீச்சு..!

மைசூர் ஸ்ரீராம்பூரை சேர்ந்தவர் நடிகை வித்யா. பல படங்களில் வித்யா துணை நடிகையாக நடித்து வந்தவர்.நடிகையாக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மைசூரு நகர செயலாளராக நடிகை வித்யா செயல்பட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு அவர்கள் இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், துர்கானூரில் உள்ள அவரது வீட்டில் வித்யா தலையில் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக வித்யாவின் கணவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை பற்றிய தகவல் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் வித்யாவை அவரது கணவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இக்கொலை தொடர்பாக மைசூரு மாவட்டம் பன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் தலைமறைவாகியுள்ள நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர். மைசூரில் காங்கிரஸ் பிரமுகரான நடிகை வித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.